இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி அச்சத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில் வெளியான வீடியோ ஒன்று இணையத்தை அலற வைத்துள்ளது. அதாவது சிங்கம் ஒன்று ஒரு பாதுகாப்பான பகுதியில் அடைக்கப்பட்டிருந்தது. அந்த பகுதிக்குள் சென்ற முடி இல்லாத நபர் ஒருவர் படிக்கட்டில் நிம்மதியாக அமர்ந்திருந்த சிங்கத்தின் அருகே சென்று அமர்ந்தார்.

அவரைப் பார்த்துக் கொண்டிருந்த சிங்கம் அவரது அருகே வந்தது. இந்நிலையில் அவர் தனது முகத்தை தன்னை பலவீனமான மிருகம் போல காட்டிக் கொண்டார். சில நிமிடங்களில் சிங்கம் அந்த நபரின் முதுகை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அவரது கழுத்தில் கடிக்க முற்பட்டது. அந்த நேரத்தில் சிங்கத்தை பராமரித்து கொண்டிருந்த நபர் வேகமாக ஓடி வந்து சிங்கத்தின் முகத்தில் அறைந்தார்.

மேலும் இந்த சம்பவம் வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் “சிங்கத்தை அறைந்ததால் எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்று ஒருவர் நகைச்சுவையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.