
திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு தமிழ் சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளில், எங்களைப் போன்றவர்கள் எடுத்து வைக்கின்ற கருத்துக்களுக்கு நேர் எதிராக… வஞ்சகம் நிறைந்த கருத்துக்களையும், உண்மைக்கு மாறான வரலாற்று திணிப்புகளையும்…. பொய் புரட்டு அவிழ்த்து விடுகின்ற எனது அருமை இந்தியன் என்ற பெயரால் அரசியல் கட்சி நடத்தும் சகோதரர்களை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். இந்த மண்ணில் இருக்கின்ற மிகப்பெரிய விடுதலைப் போராட்ட காலத்தில் பங்கெடுத்த தலைவர்களின் வம்சம்.
அதற்காக தான் உழைத்து சம்பாதித்ததில் பொருளில் பெரும்பங்கை அள்ளிக் கொடுத்த சமூகம். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்திய கேட்டில் பதிந்து கிடக்கின்ற பல லட்சக்கணக்கான பெயர்களில் இஸ்லாமிய உறவுகளின் பெயர்களிளே உழைப்பு, தியாகம், பங்களிப்பும், கொடையும் வரலாற்றின் பங்கு இருக்கிறதா? இல்லையா? இவை அனைத்தையும் மறைக்கின்றவர்களாக… இன்று நான் தமிழ்…. என் தாய்மொழி தமிழ்…. நான் ஒரு தமிழன் என்று பெருமிதத்தோடு இருக்கின்றேனே….
இந்த தமிழை இந்தியா முழுவதும் இருக்கின்ற மொழிகளிலே இந்த நாட்டை ஆளக்கூடிய தகுதி பெற்ற மொழி என் தாய்மொழி தமிழ் என் கண்ணியத்துக்கு உரிய காயிதே மில்லத் அவர்கள் தான் இந்திய நாட்டின் நாடாளுமன்றத்தில் முதல் முதலில் பதிவு செய்தவர். இந்த வரலாறு உங்களுக்கு தெரியுமா? நான் கேட்கிறேன்…. சுதந்திர இந்தியாவின் தியாக வேங்கையாக…. தியாக வாழ்வை வாழ்ந்தவர்கள் எமது சகோதரர்கள்…
அதற்காக வரலாறே தெரியாமல், அப்பாவி இந்திய இளைஞர்களின் மத்தியில்…புரிதல் இல்லாத சின்ன பசங்க, குழந்தைகளிடம் போய் தேவையில்லாத மத வெறுப்பை ஊட்டி, மத மாச்சரியங்களை உருவாக்கி…. அன்பும், சகோதரத்துவம், சமத்துவமும் நிறைந்த இந்த மண்ணில் மோசமான விளைவை உருவாக்குகின்ற…. மோசமான நடவடிக்கைகளை உருவாவதற்கு காரணமாக இருக்கின்றீர்களே… இது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பி BJP, RSSயை கடுமையாக சாடினார்.