
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2 ½ லட்சம் கோடி இப்போ கடன் வாங்கி இருகாங்க. அப்போ எப்படிப்பட்ட….. நிர்வாக திறமையற்ற…. கோமாளிதனமான…. லாக்கி இல்லாத…. துப்புக்கெட்ட…. மக்களுக்கு எதுவும் செய்யாத….நன்மை கூட செய்யாத…. மோசமான அரசு, உலகத்திலேயே… இந்தியாவிலே சொன்னால் இந்த விடியாத திமுக அரசாங்கம் என சொல்லலாம்..
இது எல்லாம் மக்கள்கிட்ட எடுத்து சொல்லப்படும். இன்னைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு பெரிய அளவுல ஆதரவு இருக்கு. அதே மாதிரி கடுமையான எதிர்ப்பு அலை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கு…. மக்கள் எதிர்பாக்குறாங்க தேர்தல் எப்போ வரும், தேர்தல் வரணும்… வரணும்னு இருக்காங்க. தேர்தல் வந்துட்டுன்னா…. திமுககாரர்கள் தொகுதியிக்கு போகவே முடியாது.
தொகுதிக்குள்ளே வராதான்னு சொல்லிட்டு, திருப்பி அனுப்புகின்ற நிலைதான் ஒவ்வொரு தொகுதியிலும் இருக்கு.இதையெல்லாம் மக்களிடம் எடுத்து சொல்லி… நம்ம சாதனைகள் எல்லாம் எடுத்து சொல்லி…. மக்களை சந்திக்கலாம்ன்னு பேசி இருக்கோம். ஆட்சி தான் போகப்போகுது. அதான் தெரிஞ்சு போச்சு. ஆட்சி போக போகுதுன்னு தெரியும்…. கிட்டத்தட்ட 2024இல் காலி ஆகிடும். காலி ஆவுறது தெரிஞ்சே தான் ஆட்சியே போனாலும் கவலையில்லைன்னு சொல்லுறாரு. எனவே போக வேண்டிய ஆட்சி தான். மக்கள் யாரும் விரும்பாத ஆட்சி. போக வேண்டிய ஆட்சி. போக வேண்டியது தான் என தெரிவித்தார்.