சிறையில் உள்ள தன்பாலினை ஈர்ப்பாளர்களுக்கு பிற கைதிகளை போல சம உரிமை வழங்கப்பட வேண்டும் என மத்திய அரசு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சிறை நிர்வாகத்துறை இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், LGBTQ+ சிறை கைதிகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் வழங்குவது மற்றும் கைதிகளை பார்வையிடுவது உள்ளிட்ட அனைத்திலும் பாகுபாடு காட்டக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறையில் உள்ள தன் பாலின ஈர்ப்பாளர்களுக்கு பாகுபாடு காட்டுவதாக புகார் எழுந்த நிலையில் தற்போது மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.