வடமாநிலங்களில் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கடுமையான பனிப்பொழிவு ஏற்படுவது வழக்கம். அதேபோன்று தற்போதும் வடமாநிலங்களில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக காலை வேளையில் மக்கள் வெளியே செல்ல சிரமப்படுகின்றனர். இதற்கிடையில் டெல்லியில் காற்று மாசடைந்ததுடன் பனிப்பொழிவும் சேர்வதால் மக்கள் பெரும் அவதி அடைகின்றனர்.

இதனால் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குரேஸ், துலைல் மற்றும் கன்சல்வான் ஆகிய பகுதிகள், பந்திபோராவின் மேல் பகுதிகள் வெள்ளை
பனிப்பொழிவால் மூடப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.