
என் மண், என் மக்கள் யாத்திரையில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, சகோதர, சகோதரிகளே…. 2024-இல் நீங்கள் ஒழித்துக் கட்ட வேண்டியது DMK . அவர்கள் சொன்னார்கள்… உதயநிதி ஸ்டாலின் என்ன சொன்னாரு ? கொசு என எதோ சொன்னாரா ? DMK_வை ஒழிச்சு கட்டுனா… DMK ( D-டெங்கு, M – மஸ்கிட்டோ, K-கொசு) எனவே சனாதன தர்மம் டெங்கு, கொசு இல்லைங்க.. DMK தான் … டெங்கு, மஸ்கிட்டோ, கொசு. அதை 2024இல் நீங்கள் முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும்
கட்சியை சாராத பொதுமக்கள் நீங்க வந்து இருக்கிறீர்கள். மோடி ஐயாவுக்காக வந்து இருக்கீங்க, எத்தனையோ கட்சியை சாராத மனிதர்களின் நின்று கொண்டிருக்கிறீர்கள். 2024இல் மறுபடியும் மோடி அவர்கள் வரவேண்டும் என்கின்ற எண்ணத்தோடு இங்கு வந்திருக்கின்றீர்கள்.
தெய்வத்திருமகனார் முத்துராமலிங்க தேவர் ஐயா, எப்படி மூக்கையா தேவர் ஐயா அவர்களை நாம் சொல்லுறோமோ, அதே வரியில் சொல்லுவதற்கு தகுதி படைத்த தலைவர் நரேந்திர மோடி அவர்கள் மட்டும் தான். அந்த வரியில் ஸ்டாலின் அவர்கள் எல்லாம் கிடையாது. இந்த தலைவர்களுடைய பெயரை சொல்ல வேண்டும் என்றால் ? அதற்கு தகுதி இருக்கக்கூடிய நரேந்திர மோடி அவர்களுக்கு தொடர்ந்து உங்களுடைய ஆதரவு இருக்க வேண்டும் என தெரிவித்தார்.