
இன்றைய காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சமூக வலைதளங்களில் பிஸியாக இருந்து வருகின்றனர். அதிக ஃபாலோவர்ஸ்காகவும் லைக்ஸ்காகவும் ஆபத்தான சில காரியங்களில் கூட அவ்வப்போது ஈடுபடுகின்றனர். அப்படி தான் சமீபத்தில் வெளியான காணொளி ஒன்றில் இளம் பெண் ஒருவர் ஆபத்தான காரியத்தில் ஈடுபட்டு பின்னர் பாதிப்பு அடைந்துள்ளார்.
அந்த காணொளியில் இளம்பெண் ஒருவர் ரயிலில் பயணிக்கும் போது கதவில் உள்ள இரண்டு கைப்பிடிகளையும் பிடித்தவாறு தொங்கியபடி பயணிக்கிறார். அப்போது திடீரென ரயில் பாதையில் இருந்த போஸ்டர் ஒன்று அவரது தலையில் இடித்து விடுகிறது. இதில் அந்தப் பெண் மயங்கிவிட்டார்.
ஆனாலும் அவர் கைப்பிடியை பலமாக பிடித்து இருந்ததால் தண்டவாளத்தில் விழாமல் தப்பித்தார். காணொளி பாதியிலேயே நின்றதால் இளம் பெண்ணுக்கு என்ன ஆனது என்பது பார்வையாளர்களுக்கு தெரியவில்லை. இது போன்ற உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபட்டு லைக்ஸ் வாங்குவதால் என்ன கிடைத்துவிடப் போகிறது என்பது தெரியவில்லை.
— Horror Mistake (@Horror_clip) August 27, 2024