தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுவரையில் 20 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகைக்கும் தொடர்பு இருப்பதாக கருதி,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் காங்கிரஸ் மூத்த தலைவரான ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், “செல்வபெருந்தகைக்கு ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளது. அப்படி இருக்கும் போது ஏன் ?அவரை இதுவரை கைது செய்யாமலும் கட்சியில் இருந்து நீக்காமலும் இருக்கிறீர்கள் உடனடியாக அவரைக் கட்சியில் இருந்து நீக்குங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. மேலும் செல்வப் பெருந்தகைக்கு ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு இருப்பதாக ஜெய்சங்கர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.