
பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தை சேர்ந்தவர் கன்ஹையா மஹதோ. ஆட்டோ ஓட்டுனர் இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக பல தனியார் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கடன் வாங்கியதற்கு தவணை செலுத்தாததால் வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு வந்து கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஆட்டோ ஓட்டுனர் அவமானத்துடன் வாழ முடியாது என்ற முடிவு செய்து மூன்று குழந்தைகள் கணவன் மனைவி என ஐந்து பேரும் விஷ மாத்திரை சாப்பிட்டு உள்ளனர்.
இதில் கீதா தேவி மற்றும் மூன்று குழந்தைகள் உயர் தப்பிய நிலையில் குடும்பத் தலைவரான கன்ஹையா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.