கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக இருப்பது நாகர்கோவிலில் உள்ள கோட்டார் புனித சவேரியார் பேராலயம் ஆகும். இந்த ஆலயம் உலக அளவில் புனித சவேரியாருக்கு என முதன் முதலாக எழுதப்பட்ட ஆலயம் என்ற பெருமை பெற்றது. இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா வருடந்தோறும் நவம்பர் 24ம் தேதி தொடங்கி டிசம்பர் 3ம் தேதி முடியும்.

இந்த வருடத்துக்கான திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் இதை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலர்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதனை திருவிழாவின் கடைசி நாளான 3-ம் தேதி என்று மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடு செய்யும் விதமாக வருகிற டிசம்பர் மாதம் 14ம் தேதி வேலை நாளாக அவர் அறிவித்துள்ளார்.