
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து வெற்றி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக உயர்ந்துள்ளார். தற்போது தளபதி விஜயை வைத்து லியோ என்ற திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்குப் பிறகு கைதி 2, விக்ரம் 2, தலைவர் 171 ஆகிய 3 படங்களை கைவசம் வைத்து இருக்கிறார்.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரு படத்தில் லீட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை பிரபல ஸ்டண்ட் கலைஞர் அன்பு அறிவு இயக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் இணைந்து ஒரு புதிய படத்தில் லீட் ரோலில் நடிக்க இருப்பதாக வந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.