லியோ-ல் விஜய் ஆபாசமாக பேசும் காட்சிக்கு லோகேஷ் கனகராஜ் படத்தின் வசனத்தை பயன்படுத்தியே நெட்டிசன்கள் புத்தி மதி சொல்லி வருகின்றனர்.

அக்டோபர் 19-ல் வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வெளியானதை தொடர்ந்து,  அதில் விஜய் அவர்கள் ஆபாசமாக பேசும் வசனம் ஒன்றை மையமாக வைத்து நெட்டிசன்கள் பலரும் இது தவறான போக்கு என தங்களது கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.  விஜய் அவர்கள் தமிழகத்தின் மிக முக்கியமான நட்சத்திரங்களில் ஒருவர்,  அதிகமான ரசிகர்களை கொண்டவர் அவர் இப்படி பேசியது தவறாக இருந்த பட்சத்திலும்,  அவரை இயக்கியது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தான். 

விஜய் அவர்களுக்கு இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை  ரசிகர்களின் எண்ணிக்கையை அறிந்து அதற்கான பொறுப்புணர்ந்து அவர் செயல்பட்டிருக்க வேண்டும் எனவும் என கருத்து தெரிவித்து வரும் நெட்டிசன்கள்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆபாச வார்த்தைக்கு எதிராக மாநகரம் படத்தில் ஆபாச வார்த்தைக்கு எதிராக காட்சி ஒன்றை வைத்திருப்பார்.  அதை பகிர்ந்த நெட்டிசன்கள்  அப்போது அப்படி சொன்னீர்களே ? இப்போ என்ன இப்படி வச்சிருக்கீங்க ? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.  அதில்,  ஏராளமானோர் அடிக்கடி பயன்படுத்தும் ஆபாச வார்த்தை ஒன்று மிகவும் சாதாரணமாகி வருகிறது. 

அந்த வார்த்தைக்கான அர்த்தம் அம்மாவை திட்டுவது தானே ? ஊரில் முடிக்கு மறுபெயராக வரும் வார்த்தை ஒன்றை வைத்து திட்டியதற்காக எனது நண்பன் ஒருவனை அடிக்க சென்று அது பிரச்சனையாகி பின் அவன் சென்னைக்கு வந்தான்.  ஆனால் இங்கு சிக்னலில் அவனது அம்மாவை சொல்லி ஒருவன் திட்டுகிறான் இவன் சிரித்துக் கொண்டு வருகிறான்.  இங்கு எல்லாமே சாதாரணமாகி போகுமானால்,  அம்மாவை திட்டுவது கூட சாதாரணமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டுமா ? என அந்த ஒரு வார்த்தைக்கு எதிராக தனது ஆணித்தரமான கருத்தை லோகேஷ் கனகராஜ் பதிய வைத்திருப்பார். 

அப்போது பலரும் பாராட்டுக்குரிய வசனத்தை வைத்த அவர்,  தற்போது விஜய் அவர்களை வைத்து இயக்கிய படத்தில் இப்படி ஒரு வசனத்தை வைத்துள்ளாரே  என ரசிகர்கள் பலர் அதிர்ந்து போய் தங்களது அதிர்ச்சியான கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்து   அந்த வீடியோக்களை பகிர அது தற்போது வைரலாகி வருகிறது.