
லியோ திரைப்படம் வெற்றியை தொடர்ந்து அதற்கான Success Meet சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமோகமாக நடைபெற்று வருகிறது.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த “லியோ” திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்து உலகளவில் ரூ.600 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
- திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்ற போதிலும் இன்றளவும் அதிகம் கவனம் ஈர்க்கும் படமாக தொடர்ந்து இருந்து வருகிறது.
- இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதியான இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் படத்தின் தயாரிப்பாளர்களால் ஒரு வெற்றி சந்திப்பு ஏற்பாடு படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அமோகமாக நடைபெற்று வருகிறது.
- வெற்றி சந்திப்பில் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உட்பட “லியோ” படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
- விஜய்யின் ரசிகர்கள் இந்த சந்திப்பு விழாவில் கூடி “லியோ” என்று உற்சாக கோஷமிட்டபடி, மிக உற்சாகமாக படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- இதை தொடர்ந்து படம் குறித்து படத்தில் நடித்த அல்லது பணியாற்றிய நடிகர்கள் மற்றும் பிற கலைஞர்கள் தங்களது கருத்துக்களை வெற்றி விழா மேடையில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடையே லியோ பாகம் 2 வருமா ? என அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், லியோ திரைப்படத்திற்கான பாகம் 2 ஷூட் செய்ய வேண்டும் எனில், தளபதி விஜய் அவர்கள் கண்ணை மட்டும் காட்ட சொல்லுங்க உடனடியா சூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம் என தெரிவித்துள்ளார்.