கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரவிபுதூர்கடை வலியவிளை பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முருகேசன் செங்கல் சூலையில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு முருகேசன் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் முருகேசனுக்கு 8 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.