
கேரளா மாநிலத்தில் உள்ள மங்களாபுரத்திலிருந்து சுண்ணாம்பு மண் ஏற்றிக்கொண்டு லாரி பொட்டல் பகுதியில் இருக்கும் ஆலை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனையடுத்து சுண்ணாம்பு மண்ணை ஆலையில் இறக்கிவிட்டு லாரி மீண்டும் புறப்பட்டது. அந்த லாரியை மனு என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.
இந்நிலையில் அம்பை- முக்கூடல் மெயின் ரோட்டில் கோவில்குளம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லேசான காயத்துடன் மனு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.