திராவிட நட்பு கழகத்தின் சார்பில் நடந்த மத நல்லிணக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மத நல்லிணக்கம் எங்கே வரும். இந்து இந்துவாக இரு.. முஸ்லீம் முஸ்லிமாக இரு ..கிறிஸ்தவர் கிருத்தவனாக இரு… பார்சி பார்சியாக இரு… பௌத்தம் பௌத்தனாக இரு.. ஆனால் அந்த மத நம்பிக்கையை பயன்படுத்தி ஓட்டு பெற வேண்டும் என்பதற்காக… வன்முறைகளை தூண்டுவது,  வெறுப்பு அரசியலை விதைப்பது… இந்துத்துவா அஜந்தாவிலே…. லவ் ஜிகாத், அது தான் நம்முடைய ஐயா மொழிபெயர்த்தார் நாடக காதல்ன்னு….

வடஇந்தியாவில் இருந்து காப்பியடிக்கப்பட்டது தமிழ்நாட்டுக்கு…. அது ஆர்எஸ்எஸ் இந்த உடைய செயல் திட்டம் ”லவ் ஜிகாத்”. இன்னொன்று மதமாற்றம். இவுங்க போதகர்களாம் சொல்லி மதம் மாத்திடுறாங்க…  முஸ்லிம்களெல்லாம் சொல்லி மதம் மாத்திடுறாங்கன்னு… இறை நம்பிக்கையின் அடிப்படையில் தான் மதம் மாற முடியுமே தவிர… யாரும் சொல்லி எல்லாம் மதம் மாற முடியாது, அது தனி மனித உளவியல் உடன் தொடர்புடையது.

கட்டாயப்படுத்தி காதலையும் வர வைக்க முடியாது, கட்டாயப்படுத்தி யாரையும் இன்னொரு மதத்திற்கு மாற வைக்கவும் முடியாது. அது வந்து இயல்பான பண்புகளுக்கு எதிரானது. அப்படி செய்ய முடியாது…  ஆனால் அவர்கள் அரசியலுக்கு பயன்படுத்துகிறார்கள். ”லவ் ஜிகாத்” முஸ்லீம் ஆண்கள் எல்லாம், இந்து பெண்களை மயக்கி….  காதலிப்பதாக நடித்து அவர்களை இஸ்லாத்துக்கு கொண்டு போய் விடுகிறார்கள். எனவே நாங்கள் இஸ்லாமியர்களை அடித்துக் கொல்லுகிறோம் என அதை  நியாயப்படுத்துகின்றார்கள்.

 பசு மாட்டின் மீது அவர்களுக்கு பெரிய நம்பிக்கை இருக்கிறது. அது அவர்களின் நம்பிக்கை… அதில் பிரச்சனை இல்லை.  ஆனால் மாட்டு வணிகத்தில் ஈடுபடக்கூடிய இஸ்லாமியர்கள்,  வேண்டுமென்றே பசுவை கொல்லுகின்றார்கள், கறி சமைக்கிறார்கள் என்று சொல்லி…  அதை காரணம் காட்டி இஸ்லாமியர்களை கொல்லுவது. அதன் மூலம் இந்துக்களை அணி திரட்டுவது என பாஜகவை விமர்சித்தார்.