
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. அவருடைய முந்தைய திரைப்படமான ஷியாம் சிங்கா ராய் மற்றும் அடடே சுந்தரா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து நானி “தசரா” எனும் புது படத்தில் நடித்து வந்தார். இதன் முதல்பார்வை போஸ்டரில் நடிகை சில்க் ஸ்மிதாவின் போட்டோ இருந்தது. அப்போது இருந்தே இப்படத்திற்கான ஒவ்வொரு அறிவிப்புகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்தில் நானியுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தை ஸ்ரீ காந்த் ஒடிலா இயக்கி உள்ளார். இத்திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 30ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக படக்குழு தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் 2-வது பாடல் வெளியாகி உள்ளது. காதல் தோல்வி பற்றிய பாடல் என்பதால் இன்று (பிப்.14) காதலர் தினத்தன்று மிகப்பெரிய வரவேற்பு இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
This Song is a slow poison to your ears 🎧
The heartbreak anthem #OriVaari from #Dasara out now 💔
Natural Star @NameisNani @KeerthyOfficial @odela_srikanth @Music_Santhosh @sathyaDP @saregamasouth pic.twitter.com/N9RYgwrd8m
— SLV Cinemas (@SLVCinemasOffl) February 13, 2023