பதஞ்சலி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில், பதஞ்சலி நிறுவன யோகா குருவான பாபா ராம்தேவ் தங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்த ஹாம் டாட் லேப் என்ற ஹோமியோபதி மருந்து நிறுவனத்தின் ரூஹ் அப்சா என்ற சத்து பானத்தை குறித்து அவதூறாக பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, அப்சா பானம் விற்பனை மூலம் வரும் லாபத்தை மசூதியும் மதரசா கட்டவே பயன்படுத்துவார்கள். இது லவ் ஜிகாத் போல சர்பத் ஜிகாத் என்று கூறினார். இந்த விளம்பரம் தங்களது நிறுவன பானத்தை அவதூறாக பேசுவதாக ஹாம் டாட் நிறுவனம் பதஞ்சலி நிறுவன விளம்பரத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு குறித்த வழக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி அமீத் பன்சால் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில், ஹாம் டாட் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்தி, இது ஒரு வெறுக்கத்தக்க பேச்சு வகுப்பு விவாதத்தை  உருவாக்கிறது.

நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இதை நியாயமல்ல என்று பாபா ராம்தேவ் வழக்கறிஞரை நோக்கி காட்டமாக தெரிவித்தார். அதன் பின் பேசிய பதஞ்சலி ராம்தேவின் வழக்கறிஞர், எனது கட்சிக்காரர் சர்ச்சைக்குரிய அறிக்கைகள் விளம்பரங்களை உடனடியாக நீக்குவதாக தெரிவித்துள்ளார்என கூறினார்.

இந்த விசாரணையை அடுத்து, பதஞ்சலி நிறுவனர் ராம்தேவ் எதிர்காலத்தில் இதுபோன்ற அறிக்கைகள் விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக இடுகைகளை வெளியிட மாட்டேன் என 5 நாட்களுக்குள் பிரமாண பத்திரிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை மே 1ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.