
பெங்களூரு நகரில் காதலருடன் நெருங்கியிருந்தபோது எடுத்த ஆபாச புகைப்படங்களை அழிக்க முயன்ற காதலி, அதற்காக ஒரு கொள்ளை சம்பவத்தை திட்டமிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுருதி என்ற 29 வயதுடைய பெண், தனது காதலரின் மொபைல் போனில் இருந்த புகைப்படங்களை அழிக்க, முன்னாள் பணியாளரான மனோஜ் என்பவரை தொடர்பு கொண்டு, ரூ.1.1 லட்சம் கொடுத்து இந்த கொள்ளை நாடகத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சுருதி மற்றும் அவரது காதலர் வம்சி கிருஷ்ணா ரெட்டி பைக்கில் சென்றபோது, முன்னே முந்திக் கொண்டு வந்த காரில் இருந்த 4 பேர், வம்சியின் மொபைல் போன்களை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர். வம்சி க்ரிஷ்ணா, போலீசில் புகார் அளித்த பின்னர், விசாரணையில் கொள்ளை சம்பவம் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதென தெரிய வந்தது.
மொபைல் போன்களை பறித்த பின்னரும், அவற்றின் பாஸ்வேர்ட்களை உடைக்க முடியாத நிலையில், சுருதி சிங்க சாண்டிரா ஏரியில் மொபைல் போனை தூக்கி எறிந்துள்ளார் என்பது போலீசார் விசாரணையின் மூலம் கண்டறிந்துள்ளனர்.