
ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் உரி பகுதியில் அமைந்துள்ள ஜெலம் ஆற்றில் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரு காதல் ஜோடி குதித்து தற்கொலை செய்தனர். தங்கள் காதலுக்கு இரு குடும்பங்களும் எதிர்த்ததால், யாசிர் ஹூசைன் ஷா மற்றும் ஆசியா பானோ என்ற இளம்பெண் ஆக இருவரும் ஆற்றில் குறித்து உயிரிழந்தனர். ஆற்றின் அலை தீவிரமாக இருந்ததால் அவர்கள் இருவரின் உடல்களும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரை நோக்கி சென்றது.
இந்த நிலையில், மார்ச் 22ம் தேதி, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் நிர்வாகம், இந்திய எல்லை பகுதியில் உள்ள உரியில் உள்ள கட்டுப்பாட்டு பாலம் வழியாக இருவரின் உடல்களையும் இந்தியாவிற்கு ஒப்படைத்தது. இதில் இந்திய இராணுவம், போலீசார், அதிகாரிகள் மற்றும் இருவரின் பெற்றோர்களும் பங்கேற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு நாடுகளின் நிர்வாகங்களும் இணைந்து செயல்பட்டதால், ஒரு பசமான முடிவை ஏற்படுத்தியுள்ளது.
யாசிரின் உடல் மார்ச் 20ம் தேதி, பாகிஸ்தான் பகுதியில் உள்ள சினாரியில் மீட்கப்பட்டது. ஆசியாவின் உடல் அதற்கு முன்பு மார்ச் 19ம் தேதி சாட்டரில் மீட்கப்பட்டது. இருவரது உடல்களும் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, குடும்பங்களிடம் அஞ்சலிக்காக வழங்கப்பட்டன. காதலுக்காக உயிர்தியாகம் செய்த இவர்கள், இறுதியில் மரணத்தில் கூட பாகிஸ்தான் – இந்தியா இடையே ஒரு உணர்வுப்பூர்வமான ஒத்துழைப்பை உருவாக்கி வைத்துள்ளனர்.