நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பிரதமர் ஆகலாம் அல்லது அவர் சுட்டிக்காட்டு நபர் பிரதமராகலாம் என்று சபாநாயகர் அப்பாவு  பேசியிருக்கிறார். அப்படி நடைபெற்றால் 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக நீட்டிக்கப்படும் என்றார். அதோடு 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்து விட்டதாகவும், தமிழக அரசு சிரமத்துடன் கூலி வழங்கி வருவதாகவும் அப்பாவு தெரிவித்தார்.