ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் வைத்து திராவிட கழக தலைவர் கி. வீரமணியின் 92 ஆவது நாளை முன்னிட்டு பழங்குடி மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர்          மா.சுப்பிரமணியன், வீட்டு வசதிதுறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் தொடங்கி வைத்துள்ளனர். அப்போது அவர்கள் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, பெரியார் மருத்துவ அணி, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி பெரியார் மணியம்மை அறிவியல்  தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் திருச்சி அஸ்வமித்ரா புற்றுநோய் மருத்துவமனை ஆகியவை ஒன்றிணைந்து கி.வீரமணியின் 92வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மருத்துவ முகாம் தொடங்கியுள்ளன.

இப்பகுதியில் அமைந்துள்ள 118 கிராமங்களில் 47 கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த முறை நாங்கள் வந்த போது அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்ததை தொடர்ந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றது. இதில் அவர்கள் தாளவாடி பகுதியில் அரசு மருத்துவமனையில் ஒரு பிணவறைவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அமைச்சர் முத்துசாமியும், நானும் சேர்ந்து ஸ்டேஷன் நகரில் ஒரு துணை சுகாதார நிலையம், தாளவாடியில் ஒரு பிணவறை,  உக்கரம் நகரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், புஞ்சை புளியம்பட்டியில் ஒரு செவிலியர் குடியிருப்பு, நம்பியூரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், திங்களூரில் சுகாதார கட்டிடம், பவானியில் மண் தொழிலாளர் பகுதியில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் என ரூபாய் 3 கோடியே 31 லட்சம் மதிப்பிலான 7 கட்டிடங்களை திறந்து வைத்துள்ளோம்.

அதோடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்த 3 ஆண்டுகளில் மட்டும் மக்கள் நலவாழ்வு துறை சார்பில் 133 கட்டிடங்கள் கட்டு தரப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 2023 ஆம் ஆண்டு தவறான சிகிச்சையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதில் எலி மருந்திற்கு பதிலாக மாற்று ஊசி போடப்பட்டது என கூறும் அவரிடம் போய் சொல்லுங்கள் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12,317 இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர். 2021 ஆம் ஆண்டு மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மருந்து பெட்டகத்தை பொதுமக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்துள்ளார். இன்றுடன் அந்த திட்டத்தில் 2 கோடி பொதுமக்கள் பயனடைந்துள்ளனர் என்றும் கூறினார்.