தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதியில் நாடார் தெருவில் வசிப்பவர் கணேஷ் பாபு. இவரது நண்பர் மணிகண்டன். இருவரும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் கோவிலூரில் தற்போது வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இருவரும் மதுரையிலிருந்து, கேரளாவிற்கு சுமார் 138 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை வேனில் கடத்தி சென்றுள்ளனர். இந்த நிலையில் ஆண்டிப்பட்டி காவல் துறையினர் நகர்  பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இதனால்  போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து வேனில் உள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகைபுதூர் பகுதியில் உள்ள இடத்தில் இருந்து 300 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை கேரளாவிற்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட கணேஷ்பாபு, மணிகண்டன் மற்றும் கொண்ட நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த அஜித்குமார், பெரியகுளம் பகுதியை சேர்ந்த பரமசிவம், முருகன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் ஆண்டிப்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.