
மதுரையின் சாலைகளில் எண்ணற்ற மாடுகள் மக்களுக்கு இடையூறு தரும் வகையில் சுற்றி வருகின்றன. மேலும் இந்த மாடுகளால் சாலைகளில் விபத்தும் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் சாலையில் சுற்றி திரிகின்ற மாடுகளை பிடிக்க வேண்டும் என அந்தந்த மாநகராட்சி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தரவின் பெயரில் மதுரையில் உள்ள திருநகர் பகுதியில் மக்களுக்கு இடையூறு தரும் வகையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி முத்தையா என்பவர் மாடுகளைப் பிடிக்கக் கூடாது என்று அதிகாரிகள் வந்த வாகனம் முன்பு படுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் மாநகராட்சி அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் பதைப்பதைத்து நின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.