கர்நாடகா முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம் மிகவும் பிரமாண்டமாக ரூபாய்.500 கோடி செலவில் நடந்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணியின் திருமணம் சென்ற 2016ம் வருடம் நவம்பர் 6-ம் தேதி நடந்தது. அப்போது ரெட்டி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அரசர்கள் போன்று உடையணிந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர நகைகளை அணிந்திருந்தனர்.

திருமண சடங்குகளானது சுமார் 5 நாட்கள் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. மணப் பெண் ரூபாய்.17 கோடி மதிப்புமிக்க காஞ்சிபுரம் பட்டு சேலையை அணிந்திருந்தார். மணப்பெண் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு ரூ.90 லட்சம் மற்றும் மணப் பெண்ணுக்காக மும்பையிலிருந்து பிரத்யேகமாக மேக்அப் ஆர்ட்டிஸ்ட் வரவழைக்கப்பட்டு ரூ.30 லட்சம் செலவிடப்பட்டது.