
உத்திரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்வு நடைபெற்ற வருகிறது. இந்த நிகழ்வில் 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல், ரயில் மற்றும் சாலை போக்குவரத்து தடை போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பக்தர்கள் தங்கள் கடமையை நிறைவேற்றும் உறுதியுடன் உள்ளனர். கடந்த பிப்ரவரி 10 மற்றும் 11ஆம் தேதிகளில் பிரயாக்ராஜில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் ரயில் மற்றும் பேருந்துகளில் இடம் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்பட்டனர். அதோடு 300 கி.மீ போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் புஹாரின் புஸார் என்ற பகுதியில் இருந்து 7 நண்பர்கள் மகா கும்பமேளா நிகழ்வுக்குச் செல்ல திட்டமிட்டனர். ஆனால் பேருந்து மற்றும் ரயில்களில் இடமில்லாததால், அவர்கள் 7 பேரும் மோட்டார் படகில் பயணிக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி காலை 10 மணி அளவில் புஸாரில் இருந்து பயணத்தை தொடங்கிய அவர்கள், காசிப்பூர் மற்றும் வரணாசி வழியாக பிப்ரவரி 12ஆம் தேதி பிரயாக்ராஜ் சென்றடைந்தனர். இவர்கள் மொத்தம் 550 கி.மீ பயணம் செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
सड़कें जाम थीं, ट्रेनें फुल थीं। ऐसे में बिहार के 7 नौजवान मोटरबोट से गंगा के रास्ते प्रयागराज महाकुंभ पहुंच गए। संगम में डुबकी लगाई। 550 KM की बक्सर टू प्रयागराज की ये जर्नी 84 घंटे में पूरी हुई।
Full Report : https://t.co/KtVeykmukZ pic.twitter.com/d1SXnnD0n5
— Sachin Gupta (@SachinGuptaUP) February 16, 2025