இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் எனும் இடத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆறுகள் ஒன்று கூடும் திருவேணி சங்கமம் இதனை மகா கும்பமேளாவாக 45 நாட்கள் கொண்டாடுவர். மகா கும்பமேளாவானது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். மிகப்பெரிய முழு கும்பமேளாவாகும். இதற்காக பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள், தேசிய, மாநிலம் மீட்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அரசு சார்பில் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஜான்சி ரயில் நிலையத்திலிருந்து பிரயாக்ராஜிக்கு இரவு புறப்பட்ட ரயில் ஹர்பல்பூரை வந்தடைந்தது. அங்கு வெகு நேரமாகியும் ரயிலின் கதவுகள் திறக்காததால் காத்திருந்த பயணிகள் ஆத்திரத்தில் கற்களை ரயிலின் ஜன்னல்கள் மீது வீசி உள்ளனர்.

இதனால் ரயிலின் உள்ளே இருந்த பயணிகள் பயத்தில் கத்தி கூச்சலிட்டுள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த ரயில்வே பாதுகாப்புத்துறை காவல்துறையினர் விரைவாக சென்று பயணிகளை கட்டுப்படுத்தினர். இதனால் ரயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரயாக்ராஜ்க்கு புறப்பட்டு சென்றது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.