ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம்  Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட கழக செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி,  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்த மாபெரும் இயக்கம் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக இந்த மாபெரும் இயக்கத்தை உருவாக்கிய இரு பெரும் தலைவர்கள். புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் சத்துணவு தந்த சரித்திர நாயகன்,  புரட்சித்தலைவி அம்மா, இரும்பு மங்கை நமக்கெல்லாம் அடையாளம் காட்தப்பட்ட ஐயா ஓபிஎஸ் அவர்கள்.

இந்த நேரத்திலே அம்மாவை வணங்கி இந்த மாபெரும் பொதுக்கூட்டத்தை…. உரிமை மீட்புக் குழு மற்றும் பூத் கமிட்டி அமைப்பதற்காக இங்கு கூடி இருக்கு விழா  கூட்டத்திற்கு தலைமை ஏற்று தந்திருக்கும் தொண்டர்களின் பாதுகாவலர்…. நாளைய முதல்வர்…… ஒரே ஒரு தலைவர்…… ஒருங்கிணைப்பாளர் அவரை  வணங்கி  பேசுகின்றேன்.

அடுத்தபடியாக இங்கு இருக்கின்ற இணை ஒருங்கிணைப்பாளர் சோழமண்டல தளபதி எங்களுக்கெல்லாம் பக்கபலமாக இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கும் அருமை அண்ணன் வைத்திலிங்கம் அவர்களே….  இணை ஒருங்கிணைப்பாளர்,  சட்டமன்றத்தில் எத்தனைப் பேர் வந்தாலும்,  எதிர்த்து நின்று ஒற்றைக் குரலாக ஆண் மகனாக ஐயாவுக்காக குரல் கொடுக்க என் ஆருயிர் அண்ணன் மனோஜ் பாண்டியன் அவர்களே….

எங்களுக்கு எல்லாம் வழிகாட்டி சென்னை மண்டல பொறுப்பாளர்,  எளிமையாகப் பழகக் கூடியவர் எங்கள் அண்ணன் ஜே.டி.சி பிரபாகரன் அவர்களே…. அடுத்தபடியாகக் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர்,  மதிப்பிற்கும் – மரியாதைக்குரிய எதிரிக்கெல்லாம் சிம்ம சொப்பனமாக விளங்கும் புகழேந்தி அண்ணன் அவர்களே….  கொள்கை பரப்புச் செயலாளர் அருமை அண்ணன்,

அவர் வார்த்தைகளால் எதிரிகளை திக்கு முக்கு ஆடச் செய்யும் மருது அழகுராஜ் அண்ணன் அவர்களே….  உங்கள் அத்தனை பேருக்கும் சென்னை மண்டல தளபதிகள்,  மாவட்டச் செயலாளர்கள் அனைவருக்கும், இங்கு மாவட்ட நிர்வாகிகள் – அமைப்புச் செயலாளர்கள் மற்றும் மகளிர் அணி செயலாளர்கள் இங்கு ஒன்றைக் கோடி தொண்டர்கள் எங்கள் ஐயா பக்கம் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.