செம்பரம்பாக்கம் ஈவிபி பிலிம் சிட்டியில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சாயின் கான் (47) என்பவர் 20 அடி உயரத்திலிருந்து விழுந்து பலத்த காயமடைந்துள்ளர்.

இந்த விபத்து, ஈவிபி பிலிம் சிட்டியில் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மக்களிடம் எழுப்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இதேபோன்ற பல விபத்துகள் இங்கு நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, “இந்தியன் 2” படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து சிலர் உயிரிழந்த சம்பவம் இன்னும் மக்கள் மனதில் நிற்கிறது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக நசரப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக ஆர்வலர்கள், தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்றும், செட்கள் உரிய அனுமதிகளுடன் கட்டப்படுகிறதா என்பதையும் தொடர்புடைய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும் படப்பிடிப்புத் தளங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது  என்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.