இன்றைய காலக்கட்டத்தில், தெரியாத நம்பர்களிலிருந்து வரும் அழைப்புகளை மக்கள் அதிகமாக தவிர்க்கின்றனர். இது பெரும்பாலும் இணைய மோசடிகள் (Cyber Fraud) அதிகரித்து வரும் சூழலால் ஏற்பட்ட பயம் காரணமாகும். இந்நிலையில், ஒரு நபர் தொடர்ந்து வந்த ஓர் அமெரிக்க எண்ணை ஸ்பாம் என்று கருதி அதைப் புறக்கணித்தார். ஆனால், பின்னர் தெரிய வந்த உண்மை அவருக்கு கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியது. அந்த அழைப்பு, சாதாரண ஸ்பாம் அல்லாது, உலகளாவிய நிறுவனமான அமேசானின் வேலைவாய்ப்பு குழுவிலிருந்து வந்ததாகும்.

அந்த நபர் முதல் முறையாக 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த அழைப்பை பெற்றார். ஆனால், அதை ஸ்பாம் என்று நினைத்து எடுக்கவில்லை. பிப்ரவரி 24ஆம் தேதி மீண்டும் ஒரு முறை அழைப்பு வந்தபோதும், அதே எண்ணத்தால் அவரை அழைத்திருப்பதை நினைத்து அதை மீண்டும் புறக்கணித்துவிட்டார். அதன்பிறகு, அந்த எண்ணிலிருந்து எந்த அழைப்பும் ஒரு மாத காலம் வரவில்லை. சில வாரங்கள் கடந்தபிறகு, அவருக்கு சந்தேகம் வந்ததால், அவர் ‘Truecaller’ செயலியில் அந்த எண்ணை சரிபார்த்தார். அப்போது தான் அவருக்கு அந்த அழைப்பு அமேசான் ஆட்சேர்ப்பு குழுவிலிருந்து வந்ததைப் பற்றிய உண்மை தெரியவந்தது.

இந்த சம்பவத்தை சமூக வலைதளமான Reddit மூலம் பகிர்ந்த அந்த நபர், தனது தவறால் வேலைவாய்ப்பை இழந்ததற்காக மிகவும் வருத்தமடைந்ததாக கூறினார். அமேசானில் வேலை பெறும் வாய்ப்பை இழந்துவிட்டதாக எண்ணி அவர் கடும் மன அழுத்தத்திற்கு ஆளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி, பல சமூக வலைதள பயனர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து, எதிர்காலத்தில் சிறந்த வாய்ப்புகள் கிடைக்க வாழ்த்தி வருகின்றனர்.