
விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையில் குரங்குகளின் குறும்புதனம் மற்றும் அதன் வினோதமான நடவடிக்கைகளின் பல்வேறு வீடியோகளை நாம் சமூகவலைத்தளங்களில் பார்த்து உள்ளோம். இதில் பல வீடியோக்கள் நமது மனதை நெகிழ வைக்கிறது.
இப்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவின் தொடக்கத்தில், ஒரு குரங்கு வீட்டின் சமையலறையில் மனிதர்களை போன்று பீன்ஸ் நறுக்குவதை காண முடிகிறது. அதே நேரம் அந்த குரங்கின் முகபாவத்தை பார்த்து உங்களால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது.
Facial expression every time is legendary…
— Tansu Yegen (@TansuYegen) June 26, 2022