பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி குக் வித் கோமாளி-யில் இருந்து தொகுப்பாளினி மணிமேகலை விலகியதாக அறிவித்துள்ளார். சமையல் மற்றும் நகைச்சுவை கலந்த இந்த நிகழ்ச்சியை மக்கள் விரும்பி பார்க்க, அதில் இடம்பெறும் கோமாளிகள் மற்றும் தொகுப்பாளர்களின் பங்களிப்பு முக்கியமானது. ஆனால், சமீபத்தில் நிகழ்ச்சியின் நடப்பில் இடையூறாக இருந்தது தொடர்பாக பிரச்னைகள் ஏற்பட்டதால், மணிமேகலை தனது விலகலை அறிவித்துள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது தொடர்பாக மனம் திறந்த அவர், சுயமரியாதை எனக்கு மிக முக்கியம் என்றும், மற்ற எதுவும் அதற்குப் பின் வருவதாக தெரிவித்துள்ளார். மேலும், தொகுப்பாளராக தனது பணி கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பாக இருந்தாலும், இம்மாதிரியான அனுபவம் இதுவரை வரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த சீசனில் பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ் பாண்டே கலந்து கொண்டுள்ளார். இவரால்தான் மணிமேகலை நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நெட்டிசன்கள் பலரும் வீடியோ வெளியிட்டு பிரியங்கா மற்றும் மணிமேகலை இடையே மோதல்கள் ஏற்பட்டதால் தான் மணிமேகலை நிகழ்ச்சி விட்டு வெளியேறியதாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.