சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மேல நெற்குப்பை நவனிக்களம் பகுதியில் சொக்கலிங்கம் கருப்பர் பொன்னழகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சுமார் 20 வருடங்களுக்கு பிறகு கோவிலில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்ட யாக வேள்வியில் 3 கால பூஜையாக கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம் உள்ளிட்டவை நடத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கலச நீருடன் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் அபிஷேக நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனையடுத்து தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.