
மத்தியப் பிரதேசம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ள அமோனா பகுதியைச் சேர்ந்த சத்யநாராயண் பட் என்பவர் தங்கள் மகன் தினேஷுக்கு திருமணம் செய்யவேண்டுமென்று நீண்ட நாட்களாகப் பெண் தேடிக்கொண்டிருந்தார். அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரின் பரிந்துரையின்படி, பொருளாதாரமாக சிக்கனமாக வாழும் 26 வயதான பெண் ஒருவரைத் திருமணம் செய்யத் திட்டமிட்டனர். அதன்படி, எவ்வித தயக்கமுமின்றி குறுகிய காலத்தில் நிச்சயதார்த்தமும், திருமணமும் நடந்தது. மணமகனின் குடும்பம் மணமகளின் குடும்பத்துக்கு ரூ.1,70,000 கொடுத்து திருமணத்தை முடித்தது.
மணமகள் வீட்டில் வந்தவுடன் எல்லோரும் மகிழ்ச்சியில் மூழ்கினர். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே புதிய மருமகள் வீட்டுக்கு வந்ததால் வீட்டில் கொண்டாட்டமும் உற்சாகமும் நிறைந்திருந்தது. புதுமண தம்பதிகள் இசை வைக்கும் போது தாளத்தில் குத்தாட்டம் போட்டனர். ஆனால் 3 நாள்கள் சென்ற பிறகு மணமகளின் ரகசியம் மாப்பிள்ளை வீட்டிற்கு தெரியவந்துள்ளது. தினேஷ் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் கூறியது என்னவென்றால் தங்களின் திருமணம் முழுவதும் மோசடிக்கு உள்ளானது என அவர் தெரிவித்துள்ளார்.
பெண் வீட்டார் முதலில் எங்கள் மகளுக்கு மொபைல் இல்லை என கூறினார் இதை நானும் இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா என நம்பினேன். ஆனால் திருமணம் ஆன பிறகு அவளிடம் ஒரு மொபைல் உள்ளதை நான் கண்டுபிடித்தேன். மொபைலில் சார்ஜிங் வைக்கும் போது அந்த மொபைலில் குறுஞ்செய்தி ஒன்று வந்தை பார்தேன் அதில் காலை 9 மணிக்கு சந்திப்போம் இதை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொள் என்ற செய்தி இருந்தது. இதனால் குடும்பத்தினர் சந்தேகத்தை ஏற்படுத்தி, அவளைப் பார்வையில் வைத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அவள் வீட்டிலிருந்து நகை மற்றும் பணத்துடன் ரகசியமாக வெளியேறும்போது குடும்பத்தினர் அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.