
ஜம்மு-காஷ்மீரில் முதன்முறையாக சர்வதேச மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரபல தடகள கலந்து கொண்டனர். இதனை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கொடி அசைத்து தொடங்கி வைத்ததோடு அதில் பங்கேற்றும் உள்ளார். நன்றாக பயிற்சி பெற்ற வீரர்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் பயிற்சி எதுவும் இன்றி அப்துல்லா ஓட தொடங்கினார்.
அதில் கிலோமீட்டருக்கு 5 நிமிடங்கள் 54 வினாடிகள் என்ற சராசரியில் அவர் ஓடி சாதனை படைத்துள்ளார். அவர் ஓடும் போது அவரது குடும்பத்தினர் மற்றும் சக வீரர்கள் அவரை உற்சாகப்படுத்தி ஊக்கம் அளித்துள்ளனர். இதற்கு முன்பு 13 கிலோமீட்டர் ஓடியதில்லை என்று தெரிவித்த அவர் தனது எக்ஸ் தளத்தில் அதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.