கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் வருகிற மார்ச் 7-ஆம் தேதி பிரசித்தி பெற்ற சந்திர சூடேஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய வட்டங்களுக்கு மார்ச் 7-ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 18-ஆம் தேதியை வேலை நாளாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.