மேற்குவங்கத்தை சேர்ந்த சபூஜின் என்ற வாலிபர் கேரள மாநிலம் அங்கமாலி அருகே உள்ள தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகின்றார். இவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மேற்கு வங்கத்திற்கு கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என்று அங்கமாலி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில் விசாரணை விசாரணை நடத்துமாறு எர்ணாகுளம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதன்படி சபூஜன் செல்போன் எண்ணை வைத்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஜாலங்கி என்னும் பகுதியில் அவர்கள் இருப்பது தெரிய வந்தது. பின்னர் தனிப்படை காவல்துறையினர் அங்கு சென்று வாலிபரை கைது செய்ததோடு சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.