2022-ஆம் ஆண்டு தஞ்சாவூரில், மைக்கேல்பட்டி கிறிஸ்தவ பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி லாவண்யா தற்கொலை செய்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக தலைவர் அண்ணாமலை, மதமாற்றத்திற்கு வற்புறுத்தப்பட்டதால் தான் மாணவி தற்கொலை செய்ததாக குற்றம் சாட்டினார். இதன் காரணமாக பள்ளி நிர்வாகி சகாயமேரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மாணவி லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. 141 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தி, 265 ஆவணங்கள், 7 பொருட்கள் கைப்பற்றப்பட்டன. லாவண்யாவை பிற வேலைகளை செய்யுமாறு அறிவுறுத்தியதால் கல்வியில் பின்தங்கியது, அதனாலேயே தற்கொலைக்கு முடிவெடுத்தார் என சிபிஐ தெரிவித்தது. மேலும், மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடைபெறவில்லை என்பதையும் சிபிஐ உறுதி செய்தது.

சகாயமேரி, தனது மீது பதிவான குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், நீதிமன்றம் வழக்கை செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.