
குஜராத்தில், பொதுத்தேர்வு மதிப்பெண் கூட்டலின் போது பெரிய தவறுகள் நிகழ்ந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒரு கணக்கு ஆசிரியர் 30 மார்க்கை தவறவிட்டதால், மாணவர் தேர்வில் தோல்வியடைந்தார். மாணவர் மறுகூட்டலுக்குப் விண்ணப்பித்தபோது, இந்த தவறை கண்டு பிடித்தனர். இதைத் தொடர்ந்து, 4,488 ஆசிரியர்களுக்கு, மாணவர் மதிப்பெண் கூட்டலில் மேற்கொண்ட தவறுகளுக்காக மொத்தம் ரூ. 64 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தவறுகள் சமீபகாலத்தில் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், Gujarat Secondary and Higher Secondary Education Board (GSEB) 9,218 ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ. 1.54 கோடி அபராதம் விதித்தது. இந்த நடவடிக்கை, ஆசிரியர்களின் கவனக்குறைவால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கும் பொருட்டு எடுக்கப்பட்டதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.