
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் தான் மயில்சாமி. இவர் சென்ற பிப்ரவரி 19-ஆம் தேதி அதிகாலை 3:30 மணி அளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் புதுச்சேரியில் இறந்த மயில்சாமிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகில் பிரபல நடிகரும் இயக்குனரமாக வலம் வரும் நடிகர் பார்த்திபன் பங்கேற்றுள்ளார். அப்போது நடிகர் பார்த்திபன் மனிதநேயம் மன்றம் சார்பில் அங்குள்ள பொதுமக்களுக்கு உணவு வழங்கி உள்ளார். அதை தன் சமூகவலைதளபக்கத்தில் “மறையா மனிதன் மயில்சாமிக்கு” என குறிப்பிட்டு பகிர்ந்திருக்கிறார் பார்த்திபன்.