
கடந்த 2019 ஆம் ஆண்டு சண்டிகர் அரசு மருத்துவ கல்லூரியில் வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அமர்வு நடத்தி வந்த நிலையில் இப்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில் இந்தியாவின் ஒரு குடிமகனாக எங்கு வேண்டுமானாலும் வசிக்கவும், கல்வி பயிலவும் உரிமை உள்ளது. இளநிலை படிப்பில் குறிப்பிட்ட அளவில் அந்த மாநிலத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம்.
ஆனால் முதுநிலை மருத்துவ படிப்பில் வசிப்பிட அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிப்பது, அடிப்படை உரிமையை பறிப்பது ஆகும். அதோடு இது அரசமைப்பு சட்டப்பிரிவுக்கு எதிரானது. ஆகையால் மாநில ஒதுக்கீட்டில் வரும் முதல் நிலை மருத்துவ இடங்களை நீட் தேர்வு தேர்ச்சி கொண்டே நிரப்ப வேண்டும். முன்னதாக செய்யப்பட்ட ஒதுக்கீடுகளுக்கு இந்த தீர்ப்பு பொருந்தாது என்று உத்தரவிட்டனர். இதில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தென் மாநிலங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகின்றது.