தேனியில் வசிக்கும் ஒருவருக்கு, இறைச்சி கடைக்காரர் ஓசியில் இறைச்சி தர மறுத்துள்ளார். இதனால் மயானத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி கொண்டு வந்து இறைச்சி கடைக்கு முன் வீசிவிட்டு சென்றுள்ளார். இந்த அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை கண்டு அங்குள்ள மக்கள் அலறியடித்து ஓடினர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் குமார் என்பவரை கைது செய்தனர். அதன் பின் அவரிடம் விசாரணை நடத்தியதில், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும், மயானத்தில் குழிதோண்டும் பணியில் ஈடுபட்டு வந்தவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.