
பிரபல பாடகரான பென்னி தயாள் மேடையில் பாடிக்கொண்டிருக்கும் போது அவரை ட்ரோன் கேமரா வந்து இடித்தது. இதனால் அவரது தலை மற்றும் விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரே ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில், விழா நடத்துபவர்கள் ஒரு certified ட்ரோன் ஆபரேட்டரை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதோடு தன் 2 விரல்களில் பெரிய காயம் ஏற்பட்டு உள்ளதாக காட்டி இருக்கிறார். நான் சாதாரண ஒரு ஆர்ட்டிஸ்ட் தான். நான் என்ன விஜய்யா?, அஜித்தா?, இல்லன்னா சல்மான் கானா?.. ட்ரோன் ஆபரேட் செய்பவர்கள் சாதாரணமாக எடுத்தால் போதும். ஆகவே இப்படி ஸ்டண்ட் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டிருக்கிறார்.
View this post on Instagram