ராஜஸ்தானில் கொடா மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் சுனில் பைர்வா என்ற மாணவன் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரியில் உள்ள விடுதி அறையில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்றிரவு தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுனிலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர் எழுதிய தற்கொலை கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில்  பெற்றோரின் கனவை நிறைவேற்ற முடியாத இயலாமையை வெளிப்படுத்தி மன்னிப்பு கோரி எழுதி இருக்கிறார்” என்று கூறினார். அதன்பிறகு கொடா கல்லூரி மேல்நிலை மற்றும் இளநிலை மாணவர்கள் முதல்வர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தற்கொலை சம்பவத்தை பற்றி சுனிலின் குடும்பத்தினர் கல்லூரி நிர்வாகம் மீது புகார் கொடுத்திருந்த நிலையில் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் நீட் தேர்வை எழுதி வெற்றி பெற்ற சுனில் 2019 ஆம் ஆண்டில் மருத்துவ படிப்பை தொடங்கினார். இந்நிலையில் கல்லூரி நிர்வாகத்தினர் இவரை முதலாம் ஆண்டில் தேர்ச்சி பெற செய்யவில்லை. இதனால் நாங்கள் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தில் முறையீடு செய்த நிலையில் 8 மாதங்களுக்கு பின் சுனில் தேர்ச்சி பெற்றார். இதைத்தொடர்ந்து 2ம் ஆண்டில் தேர்ச்சி பெற்று விட்டார். ஆனால் 3 வது ஆண்டில் தேர்வில் மோசடி செய்ததாக அவனை ஒன்றரை ஆண்டுகளாக கல்லூரிக்கு வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தனர்.

மேலும் இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் சுனில் பேசுவதற்காக முயன்ற போது அவரை திட்டி திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சுனில் மிகவும் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்து வந்துள்ளார். எனவே இந்த துயர முடிவை எடுத்துள்ளான் என்று கூறினார்கள். இதைத்தொடர்ந்து இந்த கல்லூரியில் எல்லா மனிதர்களும் சம அளவில் நடத்தப்படுவதில்லை என்று கல்லூரியை சேர்ந்த மூத்த மாணவரான கமல் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். அதன்பின் சுனிலின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இதைப்பற்றி விசாரிப்பதற்காக கல்லூரி முதல்வர் சங்கீதா 5 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்திருப்பதாக தெரிவித்தார்.