கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் பங்காருபேட்டை குடியிருப்பில் வீடு வாடகைக்கு எடுத்துள்ளனர். அந்த வீட்டில் வட மாநில பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் மாற்று உடையில் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு காவல்துறையினர் ரகசியமாக கண்காணித்தபோது, ஒரு வாடகை வீட்டில் வடமாநில பெண்கள் இருந்துள்ளனர்.

அங்கு விபச்சாரம் நடத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அந்த வீட்டிற்குள் புகுந்து 2 பெண்களை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், விபசாரம் நடத்தியவர்கள் அதிக பணம் தருவதாக கூறியுள்ளனர். அதனால் பெண்கள் இங்கு வந்ததாக அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.