சென்னை ஓட்டேரி பகுதியில் பெண் (37) ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் புரசைவாக்கத்தில் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இதையடுத்து இவர் எப்போதும் செல்போனில் பேசிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவரது தாயார் அவரை அடிக்கடி கண்டித்தும் மீண்டும் அவர் அதை செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ நாளான்று மகள் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அவரது தாயார் அவரை கண்டித்துள்ளார். பின் அவரிடம் இருந்து அந்த செல்போனை வாங்கி வைத்துக் கொண்டுள்ளார். இதனால் மாணவி மன உளைச்சலுக்கு ஆளானார். இதைத்தொடர்ந்து மறுநாள் காலையில் மாணவியின் தாயார் வழக்கம் போல் வேலைக்கு சென்றுள்ளார்.

அதன்பின் வீட்டில் தம்பியுடன் இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதை பார்த்த அவரது தம்பி சத்தம் போட்டு அருகில் உள்ளவர்களை அழைத்தான். பின் உயிருக்கு போராடிய மாணவியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

தற்போது மாணவிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்ததுடன் விசாரணை நடத்தி வருகின்றனர்.