
பிரபல மெட்டா நிறுவனத்தின் கீழ் instagram மற்றும் whatsapp போன்ற சமூக வலைதளங்கள் செயல்படுகிறது. இந்நிலையில் whatsapp மற்றும் மெட்டா போன்றவற்றை உலக அளவில் கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தி வரும் நிலையில் மெட்டா புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது instagram-ல் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர மெட்டா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இன்றைய இளைய தலைமுறையினர்கள் அதிகமாக சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக 18 வயதிற்கு கீழ் உள்ள பள்ளி குழந்தைகள் instagram போன்ற சமூக வலைதளத்தில் மூழ்கி பாதிப்படைகின்றனர்.
இதனால் அவர்களது கல்வி பாதிப்படைகிறது. மேலும் தவறான பாதையில் சென்று விடுகின்றனர். எனவே இதனை தடுக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஒரு புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதாவது 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இன்ஸ்டா அக்கவுண்டில் ‘Teen account’ என்ற புதிய அம்சத்தை கொண்டு வரப் போகிறது. அதில் பெற்றோர் மற்றும் பாதுகாவலரின் அனுமதி பெறாத அனைத்து 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளின் கணக்குகளை பிரைவேட்டாக மாற்றம் செய்யப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படுவதாக மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.