டெல்டாவில் காவேரி,  மீத்தேன் திட்டங்கள் வரக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது என  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தஞ்சை திருவையாறு தொகுதிக்குட்பட்ட நடுகாவேரியில் பாதயாத்திரை தொடங்கி அண்ணாமலை பேட்டி அளித்தார். அரசியல் காரணங்களுக்காக காவேரியில் தமிழகம் நிறைய உரிமைகளை விட்டுக் கொடுத்து விட்டது.  தமிழகத்திற்கு போதிய நீர் கிடைக்காததால் இந்த ஆண்டு நெல் கொள்முதல் மூன்று லட்சம் டன் குறைந்துள்ளது என்றும் அண்ணாமலை பேசினார்.