சிக்கிம் மாநிலத்தில் ராணுவ வாகன விபத்தில் தமிழ்நாட்டின் ஸ்ரீவில்லிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் தங்கப்பாண்டியன் (41) உயிரிழந்த சோகச் செய்தி, அவரது சொந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2004-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த தங்கப்பாண்டியன், தனது தாய்நாட்டின் பாதுகாப்பில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வந்தார். அவருக்கு மனைவி 6 மற்றும் 8 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். தனது குடும்பத்தை பிரிந்து நாட்டின் பாதுகாப்பில் ஈடுபட்ட தங்கப்பாண்டியனின் மரணம் , அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விபத்தில் மொத்தம் நான்கு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தங்கப்பாண்டியனின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, இறுதி மரியாதைகள் செலுத்தப்பட உள்ளது. அவரது குடும்பத்திற்கு அரசு சார்பில் உரிய இழப்பீடு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.