குஜராத் கலவரத்துக்கு பின்னால் பாஜகவும், சங்பரிவாரும் உள்ளது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார். சிறுபான்மையினர் வெறுப்பை தூண்டி மாநில அரசியலில் இருந்து தேசிய அரசியலுக்கு மோடி வந்துள்ளார். காதல், மதமாற்றம், புனித பசு என அவர்கள் செய்யும் வன்முறையால் தான் மோடி வளர்ந்துள்ளார் என விசிக தலைவர் கூறினார். அதோடு மோடி மீண்டும் பிரதமரானால் நாடு என்ன ஆகும் என்பது தான் நம் முன்னால் உள்ள கேள்வி என்றார்.

மேலும் அவர் கூறியதாவது, பெரியாரை எதிர்ப்பது தமிழ் தேசியம் அல்ல. சனாதனத்தை எதிர்ப்பது தான் தமிழ் தேசியம். மோடி தனிப்பட்ட நபராக சக்தியாக வளர்ந்து நிற்கிறார் என நாம் நினைக்க வேண்டாம். இதற்கிடையில் மக்கள் விரோத சனாதன கோட்பாடு அவருக்கு பின்னால் உள்ளது. ஆகவே நாம் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.